ஜார்கண்ட் மாநிலம் தான்பாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் நிறுவனத்தில் 2015-17 கல்வியாண்டில் எம்.பி.ஏ படிப்பில் சேர்க்கை நடைபெறுகிறது.
இப்படிப்புக்கு விண்ணப்பிக்க +2விற்கு பிறகு ஏதாவதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுதிறனாளிகள் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.2000ம், சிறப்பு பிரிவினர் ரூ.1000 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
CAT 2014ல் மதிப்பெண்கள் அடிப்படையில் குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டு இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.ismdhanbad.ac.in என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பிப்ரவரி 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.