செயில் நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணி

sail 1

செயில் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள 346 மேலாண்மை டிரெய்னி (Management Trainee) (டெக்னிக்கல் / நிர்வாகம்) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி மற்றும் துறைவாரியான விவரங்கள்:

1. MANAGEMENT TRAINEE (TECHNICAL)- 246

1. Ceramics – 14

2. Chemical – 24

3. Civil – 16

4. Computer Science – 05

5. Electrical – 44

6. Electronics & Instrumentation – 09

7. Mechanical – 62

8. Metallurgy – 63

9. Mining – 09

கல்வித் தகுதி:

65% மதிப்பெண்களுடன் Mechanical, Electrical, Metallurgy, Electronics & Instrumentation, Ceramics, Civil, Computer Science, Mining,Chemical போன்ற ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. MANAGEMENT TRAINEE (ADMINISTRATION)- 100

துறைவாரியான விவரங்கள்:

1. HR – 23

2. Finance – 45

3. Materials – 17

4. Marketing – 15

கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.02.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் பணி: எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள்: அகர்தலா, அலகாபாத், பெங்களூர், பரோடா, பிலாய், போபால், புவனேஸ்வர், பொகாரோ, சண்டிகர், சென்னை, டேராடூன், தில்லி (NCR), துர்காபூர், கவுகாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா, ராஞ்சி, ரூர்கேலா, சேலம், திருச்சி, விசாகப்பட்டினம்.

விண்ணப்பிக்கும் முறை:  www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. SC,ST, PH பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2015

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.05.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply