எம்.ஆர்.பி.எல். எனப்படும் மங்களூர் ரிபைன்ரி அன்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில், மேலாளர் நிலையில் 2 பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
பணியிடங்கள்
* பொது மேலாளர்(இன்டர்னல் ஆடிட் / பைனான்ஸ்) – 1 பணியிடம்
* துணை பொது மேலாளர்(பைனான்ஸ்) – 1 பணியிடம்
மேற்கண்ட பணிகளுக்கு, மாறுபட்ட தகுதி நிலைகள் உண்டு. பொது மேலாளர் பணிக்கு அதிகபட்ச வயதாக 49ம், துணைப் பொதுமேலாளர் பணிக்கு அதிகபட்ச வயதாக 44ம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வயதுவரம்பு சலுகையும் உண்டு.
இந்தி தெரிந்தவராக இருந்தால், முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பத்தை, குறிப்பிடப்பட்ட நடைமுறையில் முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி – பிப்ரவரி 23.
அனைத்து மேலதிக விபரங்களுக்கும் www.mrpl.co.in/careers