முழு நேரமும் முகக்கவசம் கட்டாயம் – ஆட்சியர்களுக்கு உத்தரவு
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்,
மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில்,
அலுவலகத்தில் அனைவரும் முழு நேரம் முறையாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.