நான்கரை மாத கர்ப்பத்துடன் விம்பிள்டன் டென்னிஸ் விளையாடும் வீராங்கனை
தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நான்கரை மாத கர்ப்பத்துடன் மன தைரியத்துடன் விளையாடிய லக்சம்பர்க் வீராங்கனைக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஐரோப்பிய யூனியனில் உள்ள ஒரு சிறிய நாடு லக்சம்பர்க். இந்த நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மான்டி மினேலா என்பவர் தற்போது நான்கரை மாத கர்ப்பமாக உள்ளார். 31 வயதாகும் இவர், கர்ப்பமான நிலையில் தன்னம்பிக்கையுடன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இருபிரிவுகளிலும் மண்டி மினேலா விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற ஒற்றையர் போட்டி ஒன்றில் அவர் இத்தாலியைச் சேர்ந்த பிரான்செஸ்கா ஸ்சியாவோனை எதிர்கொடு 1-6, 1-6 தோல்வி அடைந்தாலும் அவருடைய மன தைரியத்தை பாராட்டி சமூக வலைத்தளங்அக்ளில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஏற்கனவே, அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடும்போது கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.