வனவிலங்குகளை கொல்ல மத்திய அரசு அனுமதி. மேனகா காந்தி கண்டனம்

வனவிலங்குகளை கொல்ல மத்திய அரசு அனுமதி. மேனகா காந்தி கண்டனம்

menaka gandhiவிளைநிலங்களை பாழ்படுத்தும் விலங்குகளை கொலை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை மத்திய அமைச்சர் மேனகா காந்தி கண்டித்துள்ளார். இதனால் மேனகா காதிக்கும் ஜாவடேகருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

பயிர்களை நாசம் செய்யும் வனவிலங்குகளைக் கொலை செய்ய மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் அதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கும் என்று அத்துறையின் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார். இந்த அறிவிப்புக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்திக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மேனகா காந்தி கூறியதாவது: ‘வனவிலங்குகளைக் கொல்ல மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பிகாரில் “நீல்கய்’, மேற்கு வங்கத்தில் யானைகள், ஹிமாசலப் பிரதேசத்தில் குரங்குகள், கோவாவில் மயில்கள், மகாராஷ்டிர மாநிலம், சந்திராபூரில் காட்டுப் பன்றிகள் ஆகிய வனவிலங்குகளைக் கொல்ல சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

பிகாரைப் பொருத்தவரை, சம்பந்தப்பட்ட கிராமத்தின் தலைவரோ, விவசாயிகளோ கூட “நீல்கய்’ மான்களை கொல்ல வேண்டும் என்று விரும்பவில்லை. சந்திராபூரில் இதுவரை 53 காட்டுப் பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன. மேலும் 50 காட்டுப் பன்றிகளை கொல்வதற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இது கண்டனத்திற்குரியது என்று மேனா காந்தி கூறியுள்ளார்

மேனகா காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதில் கூறியபோது, “வனவிலங்குகளால் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளைச் சந்திப்பதாகவும், பயிர்கள் நாசமாவதாகவும் கூறி, அவற்றை கொல்வதற்கு மாநில அரசுகள் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரின. அதன் அடிப்படையில்தான், குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட காலகட்டத்துக்கு வனவிலங்குகளைக் கொல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், வனவிலங்குகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுவதற்காக அறிவியல்பூர்வமாக கையாளப்படும் முறையும் அதுதான். தற்போதுள்ள சட்டத்தின்படியே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதே தவிர, அதுவொன்றும் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டமல்ல’ என்று கூறினார்.

இரண்டு அமைச்சர்கள் இடையே இதுகுறித்து கருத்துமோதல் ஏற்பட்டுள்ளதால் மத்திய அமைச்சரவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply