இந்திய விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியால் கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்று காலை செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. இதனால் நாட்டு மக்களும், விஞ்ஞானிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற நாடு உலகிலேயே இந்தியா மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளீவந்துள்ளன.
மங்கள்யானில் உள்ள 5 கருவிகளில் ஒரு கருவியில் உள்ள கேமரா வண்ண புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளதாகவும் அதன் புகைப்படங்கள் இன்று மாலையில் வெளியிடப்படும் எனவும் பெங்களூருவில் இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மைய துணை இயக்குநர் பிச்சை மணி தகவல் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்களை ஆராய்ந்தால் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து தெரியவரும்.