5 புகைப்படங்களை அனுப்பியது மங்கள்யான். விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

mangalyaanமுதல் முயற்சியிலேயே சரித்திர சாதனை புரிந்த இந்திய விஞ்ஞானிகளின் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் 5 புகைப்படங்களை எடுத்து நேற்று பூமிக்கு அனுப்பியுள்ளதாக பெங்களூரில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

நேற்று காலை 9மணி முதல் 9.30 வரையிலான காலகட்டத்தில் செவ்வாய் கிரகத்தின் ஐந்து அரிய புகைப்படங்களை மங்கள்யான் எடுத்து அனுப்பியுள்ளது,.இந்தப் புகைப்படங்கள் தற்போது தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

mangalyaan

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியபோது, விண்கலத்தில் உள்ள மார்ஸ் கலர் கேமரா இயங்கத் தொடங்கியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இந்த கேமரா மூலம் எடுக்கப்பட்ட 5 புகைப்படங்களும் பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
விண்கலம் செவ்வாய் கிரகத்தையொட்டிய பாதையில் சீராக இயங்கத் தொடங்கியவுடன், அதிலுள்ள கருவிகளை எந்த வரிசையில் இயக்குவது என்பது தொடர்பாக முடிவு செய்யப்படும். இந்தக் கருவிகளில் இருந்து பெறப்படும் தகவல்கள் இஸ்ரோவின் விண்வெளி தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் அவை ஆய்வு செய்யப்படும்.

செவ்வாய்க்கு இதுவரை அனுப்பப்பட்ட 53 விண்கலங்களில் பெயர்களும் அவற்றின் செயல்பாடுகளும்.
அக்டோபர் 10, 1960 சோவியத் ரஷியா தோல்வி
அக்டோபர் 14, 1960 சோவியத் ரஷியா தோல்வி
அக்டோபர் 24, 1962 சோவியத் ரஷியா தோல்வி
நவம்பர் 1, 1962 சோவியத் ரஷியா தோல்வி
நவம்பர் 4, 1962 சோவியத் ரஷியா தோல்வி
 நவம்பர் 5, 1964 அமெரிக்கா தோல்வி
நவம்பர் 28, 1964 அமெரிக்கா வெற்றி
நவம்பர் 30, 1964 சோவியத் ரஷியா தோல்வி
பிப்ரவரி 25, 1969 அமெரிக்கா வெற்றி
 மார்ச் 27, 1969 சோவியத் ரஷியா தோல்வி
மார்ச் 27, 1969 அமெரிக்கா வெற்றி
ஏப்ரல் 2, 1969 சோவியத் ரஷியா தோல்வி
மே 9, 1971 அமெரிக்கா தோல்வி
மே 10, 1971 சோவியத் ரஷியா தோல்வி
மே 30, 1971 அமெரிக்கா வெற்றி
மே 19, 1971 சோவியத் ரஷியா வெற்றி
மே 19, 1971 சோவியத் ரஷியா தோல்வி
மே 28, 1971 சோவியத் ரஷியா வெற்றி
மே 28, 1971 சோவியத் ரஷியா தோல்வி
ஜூலை 21, 1973 சோவியத் ரஷியா தோல்வி
ஜூலை 25, 1973 சோவியத் ரஷியா தோல்வி
ஆகஸ்ட் 5, 1973 சோவியத் ரஷியா தோல்வி
ஆகஸ்ட் 9, 1973 சோவியத் ரஷியா தோல்வி
ஆகஸ்ட் 20, 1975 அமெரிக்கா வெற்றி
லேண்டர் ஆகஸ்ட் 20, 1975 அமெரிக்கா வெற்றி
செப்டம்பர் 9, 1975 அமெரிக்கா வெற்றி
ஜூலை 7, 1988 சோவியத் ரஷியா தோல்வி
ஜூலை 7, 1988 சோவியத் ரஷியா பகுதியளவு தோல்வி
செப்டம்பர் 25, 1992 அமெரிக்கா தோல்வி
நவம்பர் 7, 1996 அமெரிக்கா வெற்றி
நவம்பர் 16, 1996 ரஷியா தோல்வி
டிசம்பர் 4, 1996 அமெரிக்கா வெற்றி
ஜூலை 3, 1998 ஜப்பான் தோல்வி
டிசம்பர் 11, 1998 அமெரிக்கா தோல்வி
ஜனவரி 3, 1999 அமெரிக்கா தோல்வி
ஜனவரி 3, 1999 அமெரிக்கா தோல்வி
ஏப்ரல் 7, 2001 அமெரிக்கா வெற்றி
ஜூன் 2, 2003 ஐரோப்பிய     விண்வெளி அமைப்பு தோல்வி
ஜூன் 10, 2003 அமெரிக்கா வெற்றி
ஜூலை 8, 2003 அமெரிக்கா வெற்றி
மார்ச் 2, 2004 ஐரோப்பிய விண்வெளி அமைப்பு வெற்றி
ஆகஸ்ட் 12, 2005 அமெரிக்கா வெற்றி
ஆகஸ்ட் 4, 2007 அமெரிக்கா வெற்றி
செப்டம்பர் 27, 2007 அமெரிக்கா வெற்றி
நவம்பர் 8, 2011 ரஷியா தோல்வி
நவம்பர் 8, 2011 சீனா தோல்வி
நவம்பர் 26, 2011 அமெரிக்கா வெற்றி
நவம்பர் 5, 2013 இந்தியா வெற்றி
18, 2013 அமெரிக்கா வெற்றி

இதில் ரொசட்டா, டான் ஆகிய விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படவில்லை. எனவே, அவற்றின் வெற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. எனவே, செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில் 21 மட்டுமே இதுவரை வெற்றி பெற்றுள்ளன.

Leave a Reply