1.ஜம்கடமணி >இந்த மணியை பற்றி மூன்று சூக்தங்கள் உள்ளது ,இந்த மணி சோம ரசத்தால் செய்யும் குடிகை ஆகும் ,இதை தரிப்பதால் எலும்புகள் உடையாது ,முக்யமாக முதுகு எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கும் ,புஜங்களக்கு அதீத பலத்தை கொடு்க்கும்.
2>ப்ரதிஸர மணி>
இந்த மணியை கஸ்யப ரிஷி உருவாக்கினார் ,இதை தரிப்பதால்
அப்சரா,மனுஷ்ய க்ருத்ய ப்ரயோகங்கள் இது இருக்கும் இடத்தை நெருங்காது,ஆயிரம் கவச குண்டலத்திர்கு சமமானதாகும்,
சிம்ம பலத்தை கொடுக்கும் ,இதை தரித்துதான் இந்திரன் வ்ருத்தாசூரனை வென்றான்,இந்த மணியை பற்றி கௌசிக சூத்ரத்தில் இப்படி உள்ளது ,இம்மணி திலக வ்ருட்சத்தால் தயாராவது,இதை தயிர் தேனுடன் மூன்று இரவு வைத்து அனந்தரம் அபிமந்திரம் செய்ய வேண்டும் என .
கஸ்பஸ்த்வா மஸ்ருஜத் கஸ்யபத்வா ஸமைரத்|
அபிவ-ஸ்த்வேந்த்ரோ மானுஷே பிப்ரத் ஸம்ஷேஷிநோ ஜயத்||
மணி ஸஹஸ்ர வீர்யம் வர்ம தேவா அக்ருண்வத||
3>அபீவர்தமணி>
கௌசிக சூத்ரத்தில் இதை தயார் செய்யும் விதம் இவ்வாறாக உள்ளது,பஞ்ச லோகத்தையும் மிஸ்ரமம் செய்து த்ரயோதசியில் இருந்து மூன்று நாடகள் தயிர் தேனை பாத்திரத்தில் ஊற்றி அதில் இம்மணியை போட வேண்டும் ,அதன் பின் அந்த பஞ்ச லோஹ மணியை மாலையாக செய்து தர்பை மேல் அமர்த்தி ஹோமம் செய்து தரிக்க வேண்டும் ,இந்த மணியால் நஷ்ட த்ரவ்யம் கிடைக்கும்,போன வேலை மீண்டும் கிடைக்கும்,பதவியில் மேன்மை உண்டாகும்.
பர்ணமணி,ப்பால மணி,வைய்யா க்ராமணமணி,சுவர்ணதாரணமணி,அஸ்த்ருதமணி,தர்பமணி,ஔதும்பரமணி,ஷங்கமணி,ஷதவாரமணி,வரமணி.என்று மொத்தம் 13 மணிகளே ,மணி மந்த்ர ஔஷதம் எனப்படும்