கடந்த 14 ஆண்டுகளாக மணிப்பூர் உண்ணாவிரதம் இருந்து வந்த மனித உரிமை ஆர்வலரும், பிரபல சமூக சேவகியுமான இரோம் ஷர்மிளா இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ராணுவ சிறப்பு அதிகார சட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஷர்மிளா மீது தற்கொலை முயற்சி வழக்கை மணிப்பூர் போலீஸார் பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷர்மிளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் மீதான தற்கொலை முயற்சி வழக்கை இம்பால் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, மணிப்பூர் தலைநகர் இம்பாலிலுள்ள சிறையிலிருந்து இன்று காலை விடுதலையான இரோம் சர்மிளா, மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளார்.