மாங்காய் இனிப்பு பச்சடி

1423228718mankai sweet patchadi2

தேவையான பொருள்கள்

பழுத்த மாங்காய் – 1
அச்சு வெல்லம் –  2

தாளிக்க:

எண்ணெய் – 2 டேபில் ஸ்பூன்
கடுகு – சிறிது
உளுந்து – சிறிது
வரமிளகாய் –  2
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை

மாங்காய்  தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்  சர்க்க்ரை  பொடித்து வைத்துக்கொள்ளவும்.

முதலில் வானலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய  மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.

மாங்காய் முக்கால் பாகம் வெந்தவுடன் பொடித்த வெல்லதை சேர்க்கவும். வெல்லம் கரைந்தவுடன் அடுப்பில் இருந்து  இறக்கிவிடவும்.

மாங்காய் அரைப் பழமாக இருந்தாலே போதுமானது. வெல்லத்தை மாங்காயின் இனிப்பிற்கேற்ப கூடுதலாகவோ  குறைச்சலாகவோ சேர்த்துக்கொள்ளவும். இந்த பச்சடி தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Leave a Reply