மியான்மரில் ராஜபக்சே-மன்மொகன் சந்திப்பு. தமிழர்கள் கொந்தளிப்பு.

தமிழர்களின் பலத்த எதிர்ப்புகளை மீறி இலங்கை அதிபர் ராஜபக்சேவை பாரத பிரதமர் மன்மோகன்சிங் இன்று சந்தித்து பேச இருக்கின்றார். இதனால் தமிழகர்களின் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டில் நடைபெறும் பீம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று முன் தினம் பிரதமர் மன்மோகன்சிங் மியான்மர் சென்றார். அவருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் சென்றுள்ளர். இலங்கை அதிபர் ராஜபக்சேவும் அதே மாநாட்டில் கலந்து கொள்கிறார். இருவரும் இன்று சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கைவாழ் தமிழர்களின் மீள் குடியேற்றம், இந்திய அரசு சார்பில் இலங்கையில் கட்டப்பட்டு வரும் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இலங்கையை எதிர்த்து அமெரிக்க ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வர தீர்மானித்திருக்கும் இந்த நேரத்தில் ராஜபக்சேவுடன் பிரதமர் பேசுவதால் தமிழர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

Leave a Reply