பள்ளி, கல்லூரிகளில் காலையில் படிப்பு, மாலையில் தொழிற்பயிற்சி: எம்.எல்.ஏ யோசனை
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கும்போதே அவர்கள் விரும்பும் தொழிலிலும் பயிற்சி பெற வசதியாக அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாலை நேர தொழிற்பயிற்சி அமைக்க வேண்டும் என்று மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா யோசனை தெரிவித்துள்ளார். இந்த யோசனைக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பேசியபோது, “தமிழ்நாட்டில் 70 தொழிற்பயிற்சி மையங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாலைநேர தொழிற்பயிற்சி மையம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.
இது நடைமுறைக்கு வந்தால் மாணவர்கள் படித்து முடித்து வெளியே வந்தவுடன் வேலையை மட்டும் நம்பியிராமல் சொந்த தொழிலில் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
Mannarkudi MLA urges to open the evening workshops in schools and colleges