இந்தியாவை ஞானத்தின் கோயிலாக கருதுகிறேன். ஃபேஸ்புக் நிறுவனர் கருத்து

இந்தியாவை ஞானத்தின் கோயிலாக கருதுகிறேன். ஃபேஸ்புக் நிறுவனர் கருத்து

facebook. 3 facebook. facebook.2 facebook1அமெரிக்க சுற்றுப்பயணம் செய்து வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் சிலிக்கான்வேலியில் உள்ள ஃபேஸ்புக் தலைமை அலுவகத்திற்கு சென்று அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் உடன் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு நெகிழ்ச்சியாக இருந்ததாக கூறிய மார்க், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, ‘ எனது குரு ஆப்பிள் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ். இந்தியாவில் உள்ள ஒரு கோயிலுக்கு செல்ல அவர் என்னை அறிவுறுத்தினார். அவரது அறிவுரையை ஏற்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு சென்றேன். அங்கு ஒரு மாதம் தங்கியிருந்தேன். இந்தியாவை நான் ஞானத்தின் கோயிலாக கருதுகிறேன்’ என்று கூறினார்.

இதற்கு மோடி பதிலளித்துப் பேசியபோது, ‘இந்திய கோயிலில் மார்க் ஜூகர்பெர்க்கிற்கு நம்பிக்கை, உத்வேகம் கிடைத்ததாக கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

ஆப்பிள் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீப் ஜாப்ஸ், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். அப்போது அவர் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் 7 கி.மீட்டர் தொலைவில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு நடந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply