திருமணம் பாலியல் உறவுக்கான சட்டபூர்வ ஒப்பந்தம் கிடையாது: டெல்லி ஐகோர்ட்

திருமணம் பாலியல் உறவுக்கான சட்டபூர்வ ஒப்பந்தம் கிடையாது: டெல்லி ஐகோர்ட்

திருமணம் என்பது பாலியல் உறவுகளுக்கான சட்டபூர்வமான ஒப்பந்தம் கிடையாது என்றும், பெண்ணின் உடலுக்கும், மனநிலைக்கும் இடையூறு அளிக்கும் விதமாக கணவர் நடந்து கொண்டால் அது சட்டப்படி குற்றமே என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளது.

திருமணமாகி 16 ஆண்டுகளுக்குப் பின் மனைவியிடமிருந்து விவாகரத்து அளிக்குமாறு டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் அவரது கணவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது கணவர் தனக்கு பாலியல் துன்புறுத்தல்களை அளித்ததாக அவரது மனைவி பதில் அளித்தார்.
இதனையடுத்து விவகாரத்து வழங்க மறுத்த நீதிபதிகள், திருமண வாழ்க்கையில் பாலியல் வல்லுறவை தடுப்பதற்கான சட்ட வழிமுறைகள் இல்லை என்றா போதிலும், மனைவியை கண்ணியக்குறைவாக நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று கூறினர்.

ஒரு பெண் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை அரசியலமைப்பு வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள் பெண்ணின் உடலுக்கும், மனநிலைக்கும் இடையூறு அளிக்கும் விதமாக கணவனாக இருந்தாலும் நடந்து கொள்ளக்கூடாது என நீதிபதிகள் கூறினர்.

Leave a Reply