தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு தொழில்நுட்பப் பணியிடங்களுக்கான பெயர்ப் பட்டியல் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்படவுள்ளது.
பிளஸ் 2 அறிவியல் பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்ற மருத்துவத் தொழில்நுட்பப் பிரிவுகளில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் தங்களது பெயர், பட்டியலில் உள்ளதா என்பதை வரும் 22ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குச் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.
இத் தகவலை மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தெரிவித்தார்.