மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் புனித நீராடுவதால் நம்முடைய ஏழு குலங்கள் பரிசுத்தமாகும் அவை :

12744024_512209402292921_6863810525857273523_n

மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் புனித நீராடுவதால் நம்முடைய ஏழு குலங்கள் பரிசுத்தமாகும் அவை :

1) தன் குலம்

2) தன் தாயின் குலம்

3) சிறிய தாயின் குலம்

4) தாய் மாமன் குலம்

5) உடன் பிறந்தோர் குலம்

6) தந்தையோடு பிறந்தவர் குலம்

7) தன் பெண்ணைக் கொண்டவன் குலம்

திருக்குடந்தைப் புராணத்தில் இருந்த இருபது தானங்களின் பெயர்கள் குடந்தைப் புராணத்தில் உள்ள விவரம் வருமாறு :

1) கோ (பசு) தானம்

2) கன்யா தானம் ( இதற்கான பொருளை தானம் செய்வது )

3) ஸ்வர்ண (தங்கம்) தானம்

4) கவிகை (குடை) தானம்

5) வஸ்திர (ஆடை) தானம்

6)யக்ஞோபவீத (பூணுல்) தானம்

7) அஸ்வ (குதிரை) தானம்

8) பணிப்பெண் தானம்

9) ரிஷப (காளை) தானம்

10) பால் தானம்

11) அன்னதானம்

12) பாயச தானம்

13) கற்பகத்தரு (தென்னை) தானம்

14) தான்ய (அரிசி காய்கறிகள்) தானம்

15) விபூதி (திருநீறு) தானம்

16) கந்த (சந்தணம்) தானம்

17) நவமணி ( நவரத்னங்கள்) தானம்

18) மதுவர்க்க (தேன்) தானம்

19) பழவகைகள் தானம்

20) தாம்பூல தானம்

என்ற இருபது தானங்களை மறைவிடத்தில் செய்ய வேண்டும் என்று திருக்குடந்தைப் புராணத்தில் நான தான விதிப்படலத்தில் இருக்கும் பாடல்கள் சொல்கின்றன

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

Leave a Reply