நிர்வாண கொள்ளையில் ஈடுபடும் சைக்கோ திருடர்கள். பொதுமக்கள் பீதி
மத்திய பிரதேச மாநிலமான போபால் அருகே ஒரு கொள்ளைக்கூட்டம் நூதனமான முறையில் கொள்ளையடித்து வருகிறது. இந்த கொள்ளையர்கள் முதலில் ஒரு வீட்டுக்குள் சென்று அந்த வீட்டில் உள்ளவர்களை முதலில் பணயக்கைதிகளாக பிடித்து வைத்து கொள்கிறது. பின்னர் அந்த வீட்டின் பெண்களை நிர்வாணமாக்கி அதன்பின்னர் அந்த வீட்டின் விலையுயர்ந்த பொருள்களை திருடி செல்கிறது.
நிர்வாணப்படுத்தி பின்னர் கொள்ளை அடிக்கும் இந்த கும்பலால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் பீதியில் உள்ளனர். இதில் ஒரு விசேஷம் என்னவெனில் திருட வரும் கொள்ளைக்கூட்டத்தினர் வெறும் ஜட்டி மற்றும் பனியன் மட்டுமே அணிந்துள்ளார்களாம்
இந்த கொள்ளையர்களை பிடிக்க மத்திய பிரதேச மாநில காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சைக்கோ திருடர்கள் பிடிபடும் வரை தங்களுக்கு நிம்மதி இல்லை என்று அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்து வருகின்றனர்