ஜப்பான் கடற்கரையில் திடீரென கரை ஒதுங்கிய திமிங்கலங்கள். சுனாமி வதந்தி பரவுவதால் பரபரப்பு.

japanஜப்பானிய கடற்கரையில் திடீரென நேற்று மாலை நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதால் அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு இதேபோன்றி திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய சில நாட்களில் மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டு அந்நாட்டையை சீர்குலைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 கடந்த 2011 ஆம் ஆண்டு  பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்படுவதற்கு 6 நாட்களுக்கு முன்னர் இதே போன்று சுமார் 50 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.  அதே போன்ற ஒரு அபாயம் தற்போதும் ஏற்படுமா என ஜப்பானிய மக்கள் அச்சம் கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜப்பானிய விஞ்ஞானிகள், “கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் அனைத்தும் எவ்வித நோயாலும் பாதிக்கப்படவில்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளதாகவும், திமிங்கலங்கள் உயிரிழந்து கரைக்கு வர காரணம் என்ன என்பதை பற்றி ஆராய்ந்து வருவதாகவும் கூறினர்.  எனினும் திமிங்கலம் கரை ஒதுங்கியதால் சுனாமி ஏற்படும் என யாரும் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தனர்.

ஆனால் ஜப்பானின் சமூக வலைத்தளங்களில் அடுத்த பூகம்பத்திற்கு தயாராக இருங்கள் என்றும், அடுத்த சில நாட்களில் நாம் மிகப்பெரிய ஒன்றை சந்திக்கவிருக்கிறோம் என்றும் வதந்தி மிக வேகமாக பரவி வருகின்றது.

நியூசிலாந்து நாட்டிலும் கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 100 திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய 2 நாட்களில் அந்நாட்டின் 2வது மிகப்பெரிய நகரமான கிரைஸ்ட்சர்ச்சில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply