அஜித்துக்காக அனிருத் கம்போஸ் செய்யும் மாஸ் தீம் மியூசிக்
அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விவேகம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களை பரபரப்புக்கு ஆளாக்கியது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் அஜித் சிக்ஸ்பேக் உடலமைப்பில் தோற்றமளிக்கின்றார்.
இந்த காட்சி திரையில் தோன்றும்போது பின்னணியில் மாஸ் தீம் மியூசிக் ஒன்று வேண்டும் என்று இயக்குனர் சிவாவின் கோரிக்கையை ஏற்ற அனிருத் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றாராம். இன்னும் ஒருசில நாட்களில் இந்த பணி முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
‘மங்காத்தா’ படத்தில் இடம்பெற்ற தீம் மியூசிக்கைவிட பலமடங்கு இந்த தீம் மியூசிக் இருக்க வேண்டும் என்றும் அஜித் ரசிகர்கள் தெறிக்கும் அளவுக்கு இருக்கும் என்று அனிருத் தரப்பில் கூறப்படுகிறது.
வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விரைவில் படக்குழுவினர் பல்கேரியா செல்லவுள்ளனர்