மெக்சிகோ நாட்டில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் எரிமலை வெடித்து சிதறிய காட்சியை ஒருவர் நேரடியாக வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையதளங்களையும், சமூக வலைத்தளங்களையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் உள்ள கொலிமா என்ற எரிமலை கடந்த புதன்கிழமை காலை 9.15மணிக்கு திடீரென பெரும்புகையை கக்கியது. அதிலிருந்து வெளிவந்த சாம்பல் சுமார் 15 மைல்கள் வரை பரவியதாகவும், இந்த எரிமலை வெடிப்பினால் எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை என்று குறப்படுகிறது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1JxEo3P” standard=”http://www.youtube.com/v/mTBJnAl6fBg?fs=1″ vars=”ytid=mTBJnAl6fBg&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep9240″ /]
விண்ணில் சுமார் 2.5 மைல்கள் உயரத்திற்கு புகை எழும்பியதால் ஒருசில விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த எரிமலை வெடித்து சிதறும் நேரத்தில் அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து அதை யுடியூப் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. நமது சென்னை டுடே நியூஸ் வாசகங்களுக்காக அந்த வீடியோவை இங்கு பதிவு செய்துள்ளோம்.