மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில், எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எட். மற்றும் எம்.பில். போன்ற முதுநிலைப் படிப்புகள், பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படவுள்ளன. இவைதவிர, டிப்ளமோ படிப்புகளும் வழங்கப்படவுள்ளன.
2015-16ம் கல்வியாண்டில், மேற்கண்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.பில். படிப்புகளில் சேர, முதுநிலை பட்டப் படிப்பில், குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு படிப்பிலும் சேர்வதற்கு, வெவ்வேறு தகுதி நிலைகள் உள்ளன.
விண்ணப்பக் கட்டணங்கள், படிப்பிற்கேற்ப மாறுபடும். ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு, தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி – பிப்ரவரி 27.
நுழைவுத்தேர்வுகள் நடைபெறும் நாள் – மார்ச் 28 மற்றும் 29.
விரிவான தகவல்களுக்கு http://mkuniversity.org/