முதுநிலை சட்டப் படிப்பு: ஆக.26-இல் கலந்தாய்வு

images (11)

அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் முதுநிலை சட்டப் படிப்பு (எல்.எல்.எம்.) சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து சட்டக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, மதுரை அரசு சட்டக் கல்லூரி, திருச்சி அரசு சட்டக் கல்லூரி, கோவை அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றில் வழங்கப்படும் எல்.எல்.எம். முதுநிலை சட்டப் படிப்பில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் தனியே அனுப்பப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்களும் உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply