20 லட்ச ரூபாய் வேண்டாம். எனது மகனை திருப்பி கொடுங்கள். மதுரா கலவரத்தில் இறந்த எஸ்.பியின் தாயார் ஆவேசம்
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரில் நேற்று நடந்த கலவரத்தில் உயிரிழந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி.யின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக ரூ.20 லட்சம் வழங்க முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டார். ஆனால் முதல்வரின் நிவாரண தொகை ரூ.20 லட்த்தை ஏற்க மரணம் அடைந்த எஸ்.,பியின் உறவினர்கள் மறுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுராவில் நேற்று போலீஸாருக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் எஸ்.பி. முகுல் திரிவேதி குண்டடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் ரூ.20 லட்சம் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். ஆனால் இதை ஏற்க மறுத்த எஸ்.பி.யின் தாயார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்களுக்கு ரூ.20 லட்சம் பணம் தேவையில்லை. எனது மகனை திருப்பி கொடுங்கள். சமூக விரோத கும்பல்களை வளரவிட்டு அப்பாவிகளை உயிர்பலி வாங்குகின்றனர் என்று குற்றம் சாட்டினர்.
கலவரத்தில் உயிரிழந்த மற்றொரு போலீஸ் அதிகாரி சந்தோஷ் குமார் குடும்பத்தினருக்கும் மாநில அரசு ரூ.20 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளது.