சாலையில் நடந்தபடி போன் பேசும் பெண்களுக்கு அபராதம்! உபியில் ஒரு விநோத தண்டனை

சாலையில் நடந்தபடி போன் பேசும் பெண்களுக்கு அபராதம்! உபியில் ஒரு விநோத தண்டனை

உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமையான, அதிரடியான அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவரை போலவே அம்மாநில கிராம பஞ்சாயத்து ஒன்றும் வித்தியாசமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது சாலையில் நடந்தபடி போன் பேசும் பெண்களுக்கு 21,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமாம். ஆனால் இதே குற்றத்தை ஆண்கள் செய்தால் அதற்கு என்ன தண்டனை என்பது குறித்து பஞ்சாயத்தார் தெரிவிக்கவில்லை.

மேலும் பெண்களின் கவனக் குறைவைப் போக்கவே இந்த உத்தரவு என்று அந்த பஞ்சாயத்து விளக்கம் அளித்துள்ளது. அதுமட்டுமின்றி மது விற்பனை செய்பவர்களுக்கு, 1.11 லட்சம் ரூபாய் அபராதமும், பசு வதை செய்வோருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகள், அனைத்தும் கிராம மக்களின் சம்மதத்துடன் பிறப்பிக்கப்படும்’ என்று கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவுகளால், தற்போது மதுரா கிராமம் பிரபலமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply