ஜப்பான் நாட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒரு பாலத்தில் வாகங்களை ஓட்டுவது த்ரில்லிங் அனுபவமாக இருப்பதாக அப்பகுதியின் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஹோன்ஷூ தீவு அருகேயுள்ள சுஹோக்கு என்ற பகுதியில் ஒரு ஆறு உள்ளது.
இந்த ஆற்றின் குறுக்கே ஒரு மைல் நீளத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் மிகவும் வித்தியாசமாக ஏகப்பட்ட வளைவுகளும், திருப்பங்களும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதோடு தொடங்கும் இடத்தில் இருந்து முடியும் இடம் வரை சறுக்கு மரம் போல பயங்கர சரிவாக உள்ளது.
இந்த ஆற்றில் கப்பல்கள் கடந்து செல்வதற்காக இந்த பாலம் சரிவாகவும் செங்குத்தாகவும் அமைக்கப்பட்டுள்ளதாக இதனை வடிவமைத்த பொறியாளர்கள் கூறியுள்ளனர். முழுக்க முழுக்க காங்கிரீட்டினால் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் மட்சுய் நகரை சகாய்மினாட்டோ நகருடன் இணைக்கின்றது.இந்த பாலத்திற்கு எஷிமா ஒஹாஷி என்ற பெயர் வைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது.