அன்புச்செழியன் மீதான கந்துவட்டி புகார் வாபஸ்: ‘மாயவன்’ இயக்குனர் அதிரடி
பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சி.வி.குமார் அவர்கள் இயக்கிய மாயவன்’ திரைப்படம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே வெளியாகியிருக்க வேண்டிய படம். ஆனால் இந்த படத்திற்கு தடையில்லா சான்றிதழை அன்புச்செழியன் வழங்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் சி.வி.குமார் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி சென்னை கமிசனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்
இந்த நிலையில் தற்போது அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் தரப்பினர் ‘மாயவன்’ படத்திற்கான தடையில்லா சான்றிதழ் மற்றும் சி.வி குமாரின் நிதி ஆவணங்களை ஒப்படைத்துவிட்டதாகவும், இதன் காரணமாக சென்னை போலீஸ் கமிசனரிடம் தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் சி.வி. குமார் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இதன்மூலம் அன்புச்செழியன் மீதான ஒரு புகார் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்படுகிறது.
Thx to the people who supported me in the long hurdle period 🙏🙏🙏🙏 pic.twitter.com/AO29rg3vFY
— C V Kumar (@icvkumar) November 27, 2017