உத்தண்டியில் உள்ள இந்திய மேரிடைம் பல்கலைக்கழகத்தில்(ஐஎம்யு), 2 வருட எம்பிஏ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2015ம் கல்வியாண்டில் எம்பிஏ.,வில் போர்ட் அண்ட் ஷிப்பிங் மேனஜ்மென்ட் , இன்டர்நேஷனல் டிரஸ்போர்டேஷன், லாஜிஸ்டிக் மேனஜ்மென்ட் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இப்படிப்புக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டப் படிப்பில் 50 சதவீதமும், (எஸ்சி, எஸ்டி) பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் ரூ.1000ம், சிறப்பு பிரிவினர் ரூ.700ம் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வண்டும்.
பல்கலைக்கழகம் நடத்தும்(IMC-CET)நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லையில் விண்ணப்பிக்க ஏப்ரல் 22 கடைசி நாளாகும். நுழைவுச்சீட்டு ஏப்ரல் 27 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.