சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்கு விண்ணப்பித்த பி.டெக், எம்.பி.ஏ பட்டதாரிகள்
உத்தரபிரதேச மாநிலத்தில் படித்த இளைஞர்களுக்கு அவர்களுக்குரிய வேலை கிடைக்காததால் சாக்கடை சுத்தம் செய்யும் பணிக்கு பி.டெக், எம்.பி உள்பட பெரிய படிப்பு படித்தவர்கள் ஏராளமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
அரசு வேலை என்பதால் பணி நிரந்தரம் என்பதோடு ரூ.17,000 சம்பளம் கிடைப்பதாகவும், உள்ளூரிலேயே வேலை என்பதாலும் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளதாக பட்டதாரி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சாக்கடையை சுத்தம் செய்வது, சாலையை பெருக்குவது போன்ற பணிகள் செய்ய பட்டதாரி இளைஞர்கள் இறங்கு வந்துள்ளதை அடுத்து இந்த மாநிலத்தில் உள்ள வேலையில்லா திண்டாட்டம் வெட்ட வெளிச்சமாகியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இதே மாநிலத்தில் சட்டசபை பியூன் வேலைக்கு 255 பொறியியல் முனைவர் பட்டம் பெற்றிருந்தவர்களும், பேர் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.