மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: மூவர் முதலிடம்
தமிழகத்தில் MBBS மற்றும் BDS படிப்பு படிக்க்கும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
இந்த தரவரிசை பட்டியலில் முதலிடத்தை 3 பேர் பிடித்துள்ளதாக மருத்துவ கல்லூரி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தரவரிசைப் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2016-17 கல்வியாண்டில் தமிழகத்தில் MBBS தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,723 இடங்கள் உள்ளன. அதேபோல் BDS படிப்பிற்கு 1,055 இடங்கள் உள்ளன. 2 ESI மருத்துவக் கல்லூரிகளுக்கான 130 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுவரை மருத்துவ கவுன்சிலிங்கிற்கு 27,450 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங் வரும் 20-ம் தேதி (ஜூன் 20) தொடங்குகிறது.