எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தில், இளங்கலை மருத்துவப் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பிளஸ் 2வில் (வேதியியல், இயற்பியல், உயிரியல்) ஆகிய துறைகள் எடுத்து படித்திருக்க வேண்டும்.
புதுடில்லி, ஜோத்பூர், போபால், பாட்னா, ராய்ப்பூர் மற்றும் பாட்னா ஆகிய இடங்களிலுள்ள அனைத்து வளாகங்களிலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்புக்கு விண்ணப்பிப்பவர் குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.800. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசித் தேதி – ஏப்ரல் 10.
கூடுதல் தகவல்களுக்கு http://www.aiims.edu/en.html என்ற இணையதளத்தை பார்க்கலாம்.