சென்னை: தமிழகத்தில், ஜூன் 19ம் தேதி முதல், 25ம் தேதி வரை, ஒரு வாரத்திற்கு மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது.
அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., – 2,257; பல் மருத்துவம் – 85; சுயநிதிக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., – 597 என, 2,939 மாணவ, மாணவியர்,இடங்களை தேர்வு செய்தனர்; அனைத்து இடங்களும் நிரம்பின.
பழைய மாணவர் பங்கேற்பு தொடர்பாக, பிரச்னை எழுந்ததால்,கலந்தாய்வு முடிந்த அடுத்த நாள் முதல், சேர்க்கை கடிதம் தரப்படுகிறது. சேர்க்கை கடிதம் பெற்றவர்கள், கல்லுாரியில் சேர, இன்று கடைசி நாள்.
இதுவரை, 98 சதவீதம் பேர் கல்லுாரிகளில் சேர்ந்து விட்டனர். மற்றவர்களும் இன்று சேர்ந்து விடுவர்&’ என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறினர்.