ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ படிப்புக்கு சேர்க்கை

hydrebad

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் 2015-16ம் கல்வியாண்டில் எம்.சி.ஏ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி:

இளங்கலை பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிளஸ் 2வில் கணிதப் படிப்புடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இறுதியாண்டு இளங்கலை தேர்வெழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.350ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150ம் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை:

நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய தேதிகள்:

ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜனவரி 9 கடைசி நாளாகும்.

ஜனவரி 28ம் தேதி முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நுழைவுத்தேர்வு பிப்ரவரி 14ம் தேதி நடைபெற உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு ஹைதராபாத் பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply