இந்தியாவை விட்டு வெளியேறுகிறது மெக்டொனால்ட் நிறுவனம்: ஊழியர்களின் கதி என்ன?
உலகின் முன்னணி உணவு வணிக நிறுவனங்களில் ஒன்றான மெக்டொனால்டு, வட இந்தியாவில் உள்ள 169 கிளைகளையும் மூட உள்ளதால் அதில் பணிபுரிந்து வரும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பல கிளைகளை கொண்ட மெக்டொனால்ட் நிறுவனம் இன்னும் இரண்டு வாரங்களில் வட இந்தியாவில் உள்ள அனைத்து கிளைகளையும் மூட முடிவு செய்துள்ளது. இருப்பினும் தென்னிந்தியாவில் இயங்கும் கிளைகளுக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை
இதுகுறித்து மெக்டொனால்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கைய ஒன்றில் கூறியிருப்பதாவது: ‘சரியான பங்குதாரர் அமையாத காரணத்தால் வட இந்தியக் கிளைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கானட் ப்ளாசா உடன் ஏற்பட்டுள்ள வேற்றுமைகள் விரைவில் சரி செய்யப்படும். கானட் ப்ளாசா ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படவில்லை. விரைவில் நிறுவனத்துடன் தொடர்புடைய பங்குதாரர்கள், ஊழியர்கள், நில உரிமையாளர்கள் என அனைவருக்கும் ஏற்பட்ட இழப்புகள் ஈடு செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.