பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த மதிமுகவுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வண்டலூரில் மோடி கலந்து கொள்ளூம் கூட்டத்தில் வைகோ பங்கேற்பாரா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
திமுக, மற்றும் தேமுதிகவுடன் ரகசிய பேச்சுவார்த்தையை பாரதிய ஜனதா தொடங்கியிருப்பதாகவும், அதனால் வைகோ அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வைகோ கேட்ட தொகுதிகளை தருவதற்கும் பாரதிய ஜனதா இன்னும் உறுதியளிக்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. நாளை வண்டலூரில் நடைபெற இருக்கும் நரேந்திர மோடி கலந்து கொள்ளூம் பாரதிய ஜனதா கூட்டணியினர் பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொள்ள மாட்டார் என மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த தகவல்களை பாரதிய ஜனதா கட்சியினர் மறுத்துவருகின்றனர். நரேந்திர மோடியின் கூட்டத்தில் நிச்சயம் வைகோ கலந்து கொள்வார் என பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.