பாரதிய ஜனதா கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்தே சலசலப்பு இன்றி அமைதியாக இருக்கும் ஒரே கட்சி வைகோவின் மதிமுகதான் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிய ஜனதா மேலிடத்தில் வைகோ கேட்டதே 10 தொகுதிகள்தான் பின்னர் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் 8 தொகுதிகளுக்கு இறங்கிவந்தார். தற்போது வைகோ கட்சிக்கு 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்றும் ஒருவேளை பாமக கூட்டணியில் இருந்து விலகினால் எட்டு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
எனவே மதிமுக வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் வைகோ தீவிரமாக ஈடுப்பட்டிருந்தார். இன்று மாலை தேமுதிகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டிய்ல் இதோ…
விருதுநகர் – வைகோ
ஸ்ரீபெரும்புதூர் – டாக்டர் மாசிலாமணி
காஞ்சிபுரம் – மல்லை சத்யா
ஈரோடு – கணேசமூர்த்தி
தேனி – அழகு சுந்தரம்
தூத்துக்குடி – வக்கீல் ஜோயல்
தென்காசி – டாக்டர் சதன் திருமலை குமார்