United States of America என அமெரிக்காவை அழைப்பது போல் இந்தியாவை United States of India என்று அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்று மதிமுக கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்டார். இதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்த மதிமுக உறுதியாக உள்ளது.
* தேசிய நீர்க்கொள்கை 2012ஐ ரத்து செய்ய மதிமுக வலியுறுத்தும்.
* அரசியலமைப்பு சட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்.
* இளைஞர்களுக்கு இலவச விளையாட்டு பயிற்சி அளிக்க வலியுறுத்தப்படும்.
* அயல்நாட்டு வாழ் இந்தியர் நலத்துறை கிளை அலுவலகத்தை சென்னை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* வெளிநாட்டு தமிழர்களின் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தப்படும்.
* மீனவர் பிரச்னையில் கடுமையான நடவடிக்கை எடுக்க போராடுவோம்.
* மீனவர் நலனில் அக்கறை செலுத்தப்படும்.
* தமிழீழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்.
* விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்க நடவடிக்கை
* சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை
* ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை
* வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்
* காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
* கூடங்குளத்தில் அணுஉலைகளை மூட வலியுறுத்தப்படும் என்றும், கூடங்குளத்தில் மேலும் அணுஉலைகள் அமைக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ‘யுனெடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா’ என்று இந்தியாவை அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.