வைகோவின் தாயார் உடல்நலக் குறைவால் மரணம்.

வைகோவின் தாயார் உடல்நலக் குறைவால் மரணம்.

vaiko motherமதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் உடல் நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 96.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின்  தாயார் மாரியம்மாள் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவு காரணமாக பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவரது உயிர் இன்று காலை 9.15 மணிக்கு பிரிந்தது.

மாரியம்மாள் அவர்களுக்கு வைகோவை தவிர வை.ரவிச்சந்திரன் என்ற மகனும், மூன்று மகள்களும் உண்டு.

வைகோவின் தாயார் கலிங்கப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வயதிலும் மது ஒழிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply