மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக. வைகோ அதிரடி அறிவிப்பு
கடந்த தேர்தலின்போது மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆகியவை இணைந்து உருவான ‘மக்கள் நலக்கூட்டணி’ உடைந்தது. இந்த கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக வைகோ சற்று முன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
மதிமுகவின் உயர்மட்ட குழு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இருப்பினும் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுடன் தனது நட்பு தொடரும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மக்கள் நலக்கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதை ஏற்று கொள்வதாக விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மதிமுக எந்த அடிப்படையில் இந்த முடிவை எடுத்தது என்பது தனக்கு தெரியாது என்றும் இருப்பினும் இந்த இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து இருக்கும்’ என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இந்த கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக, தமாக ஆகிய கட்சிகள் விலகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.