வைகோவின் வலது கை சீமாபஷீர் அதிமுகவில் இணைந்தார். மதிமுகவினர் அதிர்ச்சி.

seema basheerவைகோவின் வலது கை என்று போற்றப்பட்டு வந்த ம.தி.மு.க. மாநில அமைப்புச் செயலாளர் சீமாபஷீர், நேற்று திடீரென முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அவரது முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்த தகவலை அதிமுக தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

நேற்று அ.தி.மு.க. தலைமையகம் கட்சியினர்களுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ”ம.தி.மு.க. மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சியின் 60வது வார்டு கவுன்சிலருமான சீமாபஷீர், வட சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சு.ஆ.இயேசுராஜ், துறைமுகம் பகுதிச் செயலாளர் ஹ.மகரூப், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தொகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் முஸ்தபா, துறைமுகம் பகுதி மாவட்டப் பிரதிநிதி ஜாஹீர் ரபி ஆகியோர், தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை இன்று (30ஆம் தேதி) நேரில் சந்தித்து அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த இணைப்பு நிகழ்ச்சியின்போது சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உடனிருந்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.