எம்.இ. கலந்தாய்வு: எஸ்.சி.ஏ. இடங்களில் எஸ்.சி. பிரிவினர் சேர்க்கை

images (8)

முதுநிலை பொறியியல் படிப்பு (எம்.இ.) சேர்க்கையில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு (எஸ்சி.ஏ.) காலியிடங்களில் எஸ்.சி. பிரிவினரைச் சேர்ப்பதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே கலந்தாய்வில் பங்கேற்க பதிவு செய்த எஸ்.சி. பிரிவு மாணவர்களும், இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களும் இதில் பங்கேற்கலாம்.

விருப்பமுள்ள மாணவர்கள் வெள்ளிக்கிழமையன்று (ஆக.7) பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை பெயர்களைப் பதிவு செய்து, அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
அவ்வாறு பங்கேற்கும் மாணவர்கள் வைப்புத் தொகையாக  ரூ. 1,150 செலுத்த வேண்டும் என பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply