மெக்கா: ஹஜ் யாத்திரைக்கு 717 பேர் நெரிசலில் சிக்கி பலி.

மெக்கா: ஹஜ் யாத்திரைக்கு 717 பேர் நெரிசலில் சிக்கி பலி.
[carousel ids=”72307,72308,72309,72310,72311,72312,72313,72314,72315,72316,72317,72318,72319″] சமீபத்தில் மெக்காவில் ராட்சத கிரேன் ஒன்று சரிந்து விழுந்ததால் 107 பேர் பலியான சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் மீண்டும் அதே மெக்காவில் கூட்ட நெரிசல் காரணமாக 717 பேர் பலியானதாக திடுக்கிடும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. இதில் இருவர் இந்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித தலமாக விளங்கி வரும் மெக்காவுக்கு, ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ‘ஹஜ்’ புனித பயணம் செல்வது வழக்கம். இந்த ஆண்டும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் புனித பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் புனித யாத்திரைக்கு வந்தவர்களின் கூட்டம் அதிகமானதால், திடீரென மெக்கா மசூதிக்கு வெளியே கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 717 பேர் பலியானதாகவும், 800க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியா மற்றும் மலேசியாவை சேர்ந்தவர்கள் தான் அதிகளவில் பலியாகியுள்ளதாகவும், இந்தியாவை சேர்ந்த இருவர் பலியானதாகவும் தகவல்கள் உறுதியாகியுள்ளது. ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த 60 வயதான பிபி ஜான் என்பவரும், கேரளாவைச் சேர்ந்த முகமது என்பவரும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் தகவல்கள் தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரை தவிர இந்தியாவை சேர்ந்த வேறு யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என இந்திய ஹஜ் கமிட்டித் துணைத்தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்

Leave a Reply