கார்த்தி , நாகார்ஜுன் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் இருந்து எவ்வித காரணமும் இன்றி விலகிய ஸ்ருதிஹாசனுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவர் புதிய படங்களிலோ அல்லது விளம்பர படங்களிலோ நடிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கார்த்தி நடிக்கவுள்ள முதல் நேரடி தெலுங்கு திரைப்படம் ஒன்றை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குவதாக இருந்தார். நாகார்ஜுனன் மற்றும் கார்த்தி முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்தினை பிவிபி சினிமா பெரும் பொருட்செலவில் தயாரிக்க முடிவு செய்திருந்தது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டதால், படப்பிடிப்பு நாளும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது திடீரென படத்தில் இருந்து விலகுவதாக இயக்குனருக்கு ஸ்ருதிஹாசன் இமெயில் மூலம் தெரிவித்துள்ளதால் கடும் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர்கள் நீதிமன்றத்தில் ஸ்ருதிஹாசன் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதி, பிவிபி சினிமா மீது தவறில்லை என்றும், எவ்வித முன்னறிவிப்பு மற்றும் காரணம் இன்றி படத்தில் இருந்து வெளியேறிய ஸ்ருதி ஹாசன் புதிய படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிப்பதற்கு தற்காலிக தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் நடிக்க மீண்டும் ஒப்புக்கொள்வாரா? அல்லது வழக்கை மேல் கோர்ட்டுக்கு கொண்டு செல்வாரா? என்பது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.