ஊடங்கங்கள் அமெரிக்க மக்களின் எதிரி. அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஊடங்கங்கள் அமெரிக்க மக்களின் எதிரி. அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பதவியேற்றதில் இருந்தே சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் , செயல்களையும் செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது ஊடகங்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் நேற்று தனது டுவிட்டரில்  ஊடகங்கள் குறிப்பாக  CNN, ABC, CBS போன்ற ஊடங்கங்கள் அமெரிக்க மக்களின் எதிரி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு நல்ல செய்தியாளர் சந்திப்பை இதுவரை தான் பார்த்ததில்லை என்று ரஷ் லிம்பக் என்ற ஊடகவியலாளர் கூறி இருந்தார். இதனை பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். போலி ஊடகங்கள் இதனை வித்தியாசமாக, நேர்மையற்ற முறையில் அணுகுகிறது” என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னரும் பல அமெரிக்க அதிபர்கள் ஊடகங்களை விமர்சித்திருந்தாலும் இந்த அளவுக்கு கடுமை இருந்ததில்லை என்று. றப்படுகிறது.

Leave a Reply