இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (NLC) நிரப்பப்பட உள்ள துணை மருத்துவ அதிகாரி, மருத்து அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 03/2015
பணி: துணை மருத்துவ அதிகாரி, மருத்துவ அதிகாரி
தகுதி: மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் முடித்து இண்டர்ஷீப் முடித்திருக்க வேண்டும்
எம்.பி.பி.எஸ் முடித்து Obstetrics மற்றும் Gynaecolog துறையில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.05.2015 தேதியின்படி துணை மருத்துவ அதிகாரி பணிக்கு 32க்குள்ளும், மருத்துவ அதிகாரி பணிக்கு 36க்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: துணை மருத்து அதிகாரி பணிக்கு மாதம் ரூ.24,000 – 3% – 50,500 வருடத்திற்கு ரூ.10.24 லட்சம்.
மருத்துவ அதிகாரி பணிக்கு மாதம் ரூ.24,000 – 3% – 50,500 வருடத்திற்கு ரூ.12.31 லட்சம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nlcindia.com/careers/DetailedAdvt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.