தேசிய மருந்து விலை நிர்ணய கழகத் தலைவர் சிங் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அத்தியாவசிய மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ள 348 வகையான அத்தியாவசிய மருந்துகளை அதில் குறிப்பிட்ட விலைக்கே விற்பனை செய்யவேண்டும், அதை மீறி அதிக விலைக்கு விற்கு மருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் சிங் எச்சரித்துள்ளார்.
அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் மேலும் சில மருந்து வகைகளை சேர்க்க மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது என்றும் அதுகுறித்து அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.
பல்வேறு காரணங்களுக்காக மருந்து நிறுவனங்களிடம் இருந்து சென்ற ஆண்டு மட்டும் ரூ.3200 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டதாகவும், வரும் காலங்களில் மருந்து நிறுவனங்கள் உரிய முறையில் கண்காணிக்கப்படும் என்றும் சிங் கூறினார்.