பெரும்பாலும் நாம் ஏலக்காய்யை மனமாக இருக்க பிரியாணி சமைக்கும் போதும், பண்டிகை காலங்களில் இனிப்புகள் சமைக்கும் போதும் தான் உணவில் சேர்ப்போம். ஆனால், ஏலக்காயில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. முக்கியமாக மழைக் காலத்தில் ஏற்படும் சளி, தொண்டை தொற்று போன்றவைக்கும் இது நல்ல பயனளிக்கிறது.
மேலும், ஏலக்காய் நெஞ்சு வலி, ஆண்மை மற்றும் பெண்மை குறைவுக்கும் அருமருந்து என சில ஆயுர்வேத குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன. இனி, அன்றாட உணவில் ஏலக்காய், சில பயனுள்ள மருத்துவ பயன்கள் பற்றி காணலாம்…..
செரிமானம்
பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் போன்றவற்றுக்கு ஏலக்காய் ஓர் சிறந்த மருந்தாகும்.
ஆண்மை குறைவு
ஏலக்காய் ஆண்மைக் குறைவு மற்றும் பெண்மைக் குறைவை போக்கி குழந்தைப் பாக்கியமும் தரவல்லது
விக்கல்
அடிக்கடி விக்கல் எடுத்தால், ஓரிரு ஏலக்காய் மற்றும் ஐந்தாறு புதினா இலைகளை நீரில் இட்டு கொதிக்க வைத்து அதை வடிக்கட்டி குடித்தால், சரியாகிவிடும்.
சிறுநீர் எரிச்சல்
சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் உண்டாகும், அப்படி இருப்பவர்கள், நெல்லிக்காய் சாற்றில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூளை சேர்த்து தினமும் மூன்று வேலை குடித்து வந்தால், சீரான முறையில் தீர்வுக் காண முடியும்.