ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப் படுகிறது. இந்த ஆடாதோடா இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால்…
இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும். மேலும் இந்த ஆடா தோடா (ஆடா தோடை ) இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். இதுமட்டுமா, நீண்ட நாட்களாக இருந்து வந்த நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச் சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும். மேற்கண்ட முறைப்படி 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகா து.