ஆவாரையின் மருத்துவ பண்புகள்

avarai_01

இயற்கையாக கிடைக்க‍க்கூடிய பல பொருட்களில் பல மருத்துவ குணங்கள் ஒளிந்துகிடக்கின்றன• அவற்றை நம் முன்னோர்கள் இனங்கண்டு நமக்கு வழங்கிச் சென்றுள்ள‍னர். ஆனால், நாமோ குரங்கு கையில் கிடை த்த பூமாலையாக அதை அலங்கோலப்படுத்தி,அதன் மரபை சிதைத்து, மேல்நாட்டு மோகத்தில் மூழ்கி போதையில் மிதந்துகிடக்கும் அவலம் இங்கே நிகழ் ந்து கொண்டிருக்கிறது. தற்போதுதான் மெல்ல‍ மெல்ல‍ நம் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட்டு, மறைந்து வந்த அழிந்து வந்த நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற‌ இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களில் உள்ள‍ மருத்துவத்தின் மகத்துவத்தை உணர்ந்து செயல்படுத்த‍ ஆரம்பித்திருப்ப‍து நல்ல‍ பாராட்டுக்குரிய விஷயமாகவே கருதப்படுகிறது.

அப்ப‍டி இயற்கையாக கிடைக்க‍கூடிய பொருட்களில் ஆவாரையும் ஒன்று. இதில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ பண்புகளில் சிலவற்றை இங்கு காண்போம்.

இந்த ஆவாரை இலை, பூ, வித்து, பட்டை, வேர் இவை களைத் தனித்தனியாக ஒன்றிரண்டாக இடித்துச் சேர்த்து கசாயம் போட்டுக்குடித்துவந்தால், நீரிழிவுநோய்குணமாகிறது. இதனை ஆறாத புண்களுக்கும், எலும்புச் சுரத்திற்கும் கொடுக்க நல்லபலன் கிடைக்கும்.

மேலும் இதன் மருத்துவ பண்புகள்,  இலை மற்றும் பூவை பச்சையாக அரைத்து தேய்த்துக் குளிக்க வெப்பம் தணிகிறது. சருமநோய்கள் அணுகாது. அம்மைநோய் உள்ளவர்களுக்கு இலையைக்கொண்டு வருட நமைச்சல் குறைகிறது. பட்டையை சாயம் செய்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண், வாய் துர்நாற்றம் குணமாகிறது. பற்கள் பலப்படுகிறது. பட்டையில் அதிகளவு சத்துள்ளது.

Leave a Reply