அசிடிட்டி பிரச்சனைக்கு உடனடி தீர்வளிக்கும் சீரகம்!

images (1)

இயற்கை நமக்கு தந்த ஓர் வரப்பிரசாதம் தான் சீரகம். சமையலில் பயன்படுத்தும் சீரகம் தன்னுள் பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இதனால் உடலின் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய சீரகம் பயன்படுகிறது. அதில் செரிமான பிரச்சனை, நோயெதிர்ப்பு சக்தி குறைவு, ஆஸ்துமா, சளி, இரத்த சோகை, தூக்கமின்மை, பைல்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

அதுமட்டுமின்றி, சீரகம் தற்போது பலரும் அவஸ்தைப்படும் அசிடிட்டி பிரச்சனைக்கும் நல்ல தீர்வை வழங்கும். இதனை இயற்கை மருத்துவ வைத்தியர்களும் பரிந்துரைக்கின்றனர். மேலும் சீரகம் இரைப்பையில் அதிகப்படியான அமில உற்பத்தியினால், நெஞ்செரிச்சல் ஏற்படுவதையும் தடுக்கும்.

சீரகத்தில் உள்ள சத்துக்கள் சீரகத்தில் புரோட்டீன், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

செரிமானத்தில் சீரகம் இயற்கையாகவே சீரகத்திற்கு உணவுகளை எளிதில் செரிக்கும் திறன் உள்ளது. உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால், சீரகத்தை மருத்துவர் பரிந்துரைத்த படி பின்பற்றி வர வேண்டும். இதனால் செரிமான பிரச்சனைகள் நீக்கிவிடும். அதுமட்டுமின்றி, சீரகத்தை தொடர்ச்சியாக எடுத்து வந்தால், வயிற்றுப் போக்கு, குமட்டல், வாய்வுத் தொல்லை மற்றும் பல வயிற்றுப் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

அசிடிட்டி அசிடிட்டி பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் சிறிது சீரகத்தை வாயில் போட்டு நன்கு மென்று தண்ணீர் குடித்து, 1/2 மணிநேரத்தில் அசிடிட்டியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். அசிடிட்டி பிரச்சனை ஏற்படுவதற்கு காரணமே வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் தான். எனவே சீரகத்தைப் பயன்படுத்துங்கள்.

செரிமான நொதிகளைத் தூண்டும் சீரகமானது கணையத்தில் செரிமான நொதிகளைத் தூண்டி, செரிமானம் சீராக நடைபெறுவதற்கு வழிவகுத்து, அசிடிட்டியை கட்டுப்பாட்டுடன் வைக்கும். ஆகவே எந்த ஒரு வயிற்று பிரச்சனைக்கும் சீரகத்தை எடுத்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

சீரகத் தண்ணீர் சிறந்தது சீரகத்தை மென்று சாப்பிட பிடிக்காதர்கள், அதனை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, அந்த நீரை தினமும் குடித்து வரலாம். இதனால் அசிடிட்டி பிரச்சனை நீங்குவதோடு, உடல் வெப்பமும் தணியும்.

Leave a Reply